திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி

தீவிர சோதனைக்கு பிறகே திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்கள் அனு மதிக்கப்பட்டு வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன


திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி
Published on: 

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை மறு நாள் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட்டு அனு மதி வழங்கி உள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோட்டை தெருவின் நுழைவு வாசலில் இருபுறமும் மூங்கில்களான தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலைக்கு செல்லக்கூடிய பழனியாண்டவர் கோவில் படிக்கட்டு பாதையின் பக்கவாட்டிலும் மூங்கில்களால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.மலை அடிவாரத்தில் பழனியாணடவர் கோவில் வாசல் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆவணங்கள் சரிபார்ப்பு

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதை, பழனியாண்டவர் கோவில் வளாகத்திலும், மலையின் கிழக்கு பகுதியில் உள்ள புதிய படிக்கட்டு பாதையிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதார் கார்டு, செல்போன் எண்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சரிபார்த்து அதை நோட்டில் பதிவு செய்த பிறகே பக்தர்களும், சிக்கந்தர் தர்காவுக்கு செல்லும் முஸ்லிம்களை மலைக்கு செல்ல அனுமதித்து வருகிறார்கள்.

மலைக்கு செல்ல வருபர்கள் பை உள்ளிட்ட உடைமைகள் கொண்டு வந்தால் அவற்றை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே மலைக்கு எடுத்து செல்ல அனுமதிக்கிறார்கள் குழந்தைகளுக்கு பால், பிஸ்கட், குடிநீர் உள்ளிட்ட உணவு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும் மலைக்கு செல்ல வருபவர்களிடையே சமைத்த உணவு மற்றும் சிலபொருட்கள் எடுத்து செல்வ தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

இதுகுறித்து போலீசார் கூறும்போது, புதிய நிபந்தனைகள் நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் இருந்த நடைமுறைகள், நிபந்தனைகள், சில கட்டுப்பாடுகள் பின் பற்றப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) வரை பக்தர்கள் அனைவரும் மலைக்கு சென்று வர அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே கிரிவலப்பாதையில் திருப்பரங்குன்றம் கோவில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X