

சென்னை
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
புதிய பேருந்துகள் வாங்கவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த குறையும் இல்லை.
ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற சதிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு உள்ளது. டிடிவி தினகரன் தான் சிறைக்கு செல்லும் காலம் வந்துவிட்டது என கூறினார்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் தமிழக ஆளுநர் ஆய்வுகளை மேற்கொள்கிறார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக செயல்படுகிறது; தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.
#Jayakumar | #TTVDhinakaran