"தவெகவுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும்" - துரை வைகோ

மதிமுக தொடர்ந்து திமுக தலைமையிலான கூட்டணியிலேயே பயணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
துரை வைகோ
Published on

கோவை,

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ, மின்சாரத் துறையில் உள்ள இடையூறுகளை நீக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி குறித்து அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவகாசம் வழங்க வேண்டும்

"தவெக அரசுக்கு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

அரசு நடவடிக்கை

மேலும், புதிய அரசு பொறுப்பேற்று சில வாரங்களே ஆன நிலையில் அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளை சரிசெய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும், போதை கலாசாரம் மற்றும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

அத்துடன், மதிமுக தொடர்ந்து திமுக தலைமையிலான கூட்டணியிலேயே பயணித்து வருவதாகவும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து தனது கருத்துகளையும் பகிர்ந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com