மருத்துவ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் - கால அவகாசம் இன்றுடன் நிறைவு

மருத்துவ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
மருத்துவ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் - கால அவகாசம் இன்றுடன் நிறைவு
Published on

சென்னை,

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. மருத்துவப் படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜனவரி 7 ஆம் தேதி(இன்று) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை 50 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும், நேரில் விண்ணப்பிங்களை சமர்ப்பிக்க ஜனவரி 10 ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர 6,957 இடங்களும், பி.டி.எஸ்., படிப்பில் சேர 1,925 இடங்களும் உள்ளன என்றும், ஜனவரி 10 ஆம் தேதிக்கு மேல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதியை மத்திய அரசு வெளியிட்ட பிறகு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும். மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com