காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேர கட்டுப்பாடு; முதல் அமைச்சர் அறிவிப்பு

காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேர கட்டுப்பாடு விதித்து முதல் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேர கட்டுப்பாடு; முதல் அமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதன் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு கடந்த 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டு வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்வதற்கு ஏற்ற, நடவடிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக அரசு எடுத்து வருகிறது. இதன்படி, காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் இயங்குவதற்கு நேர கட்டுப்பாடு விதித்து தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிவிப்பில், பெட்ரோல் பங்குகள், கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணிவரை செயல்பட வேண்டும்.

எனினும், மருந்தகங்கள், உணவகங்கள் வழக்கம்போல் நாள் முழுவதும் செயல்படும். அவற்றுக்கு நேர கட்டுப்பாடுகள் கிடையாது.

இதேபோன்று, ஸ்விக்கி, ஜுமேட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்நிறுவனங்கள், பொதுமக்களுக்கு உணவு விநியோகிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஞாயிற்று கிழமை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

தேவையின்றி மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கும் வகையில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், விளைபொருட்களை 180 நாட்கள் அரசு சேமிப்பு கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம். சேமிப்பு கிடங்கிற்கான வாடகை கட்டணத்தை 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை. விரைவில் அழுக கூடிய பொருட்களை குளிர்சாதன சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com