கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில்களின் நேரம் மாற்றம்

கோப்புப்படம்
ஏ.சி.மின்சார ரெயில் சேவை நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 3 ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 4 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இது நாளை (5-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதன் விவரம் வருமாறு:-
* சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் நாளை முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. கடற்கரையில் மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு மாலை 4.42 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
* செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு வரும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு கடற்கரை வந்தடையும்.
* தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து மதியம் 2.28 மணிக்கு புறப்பட்டு மாலை 3.23 மணிக்கு கடற்கரை சென்றடையும்.
* ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தமாக தாம்பரம்-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-கடற்கரை, கடற்கரை-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-தாம்பரம் ஆகிய ரெயில்கள் நாளை முதல் ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும்.
ஏ.சி.மின்சார ரெயில் சேவை
ஏ.சி.மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 9 மின்சார ரெயில் சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* திருமால்பூரில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரெயில் தாம்பரத்துக்கு மதியம் 1.15 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கு பதிலாக 2.05 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மதியம் 1.32 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 1.30 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.27 மணிக்கு செல்லும் ரெயில் மதியம் 2.25 மணிக்கும் சென்றடையும்.
* கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 3.39 மணிக்கும், தாம்பரத்துக்கு மாலை 4.40 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 4.35 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.30 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.30 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.25 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.38 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.47 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.33 மணிக்கும் சென்றடையும்.
* தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.53 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.55 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.48 மணிக்கும் சென்றடையும்.
* கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.10 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு செல்லும் ரெயில், இரவு 11.55 மணிக்கும் சென்றடையும்.
* செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும்.
* கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.50 மணிக்கும், தாம்பரத்திற்கு இரவு 10.40 மணிக்கு செல்லும் ரெயில் இரவு 11.15 மணிக்கு சென்றடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






