மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி பறிமுதல்

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி பறிமுதல்
Published on

கண்ணமங்கலம்

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.

கண்ணமங்கலம் அடுத்த பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமத்தில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்ரோடு பகுதியில் சென்றபோது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர்.

உடனே லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் ஓட்டம் பிடித்தார். லாரியை பறிமுதல் செய்த அலுவலர்கள் நடத்திய விசாரணையில் அந்த டிப்பர் லாரியை வெள்ளூர் நாக கொல்லைமேடு பகுதியை சேர்ந்த உரிமயாளரான ஏழுமலை பரத் (வயது 24) ஓட்டி வந்தது தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரி 2 யூனிட் மணலுடன் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com