புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
Published on

ஆரணி

ஆரணி புதுக்காமூர் பகுதியில் அமைந்துள்ள பெரிய நாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று தீர்த்தவாரி நடந்தது.

இதையொட்டி உற்சவர் சாமியை கோவில் எதிரே உள்ள கமண்டல நாக நதி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று ஆற்றில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com