திருச்செந்தூர்: அமலி நகர் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

12 நாட்களாக நடைபெற்று வந்த அமலி நகர் மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
திருச்செந்தூர்: அமலி நகர் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அமலிநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டதோடு, பணி தொடங்கப்படவில்லை.

எனவே, உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 7-ந் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் மீன் பிடித்தொழிலுக்கு கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மீனவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

அத்துடன், வரும் திங்கட்கிழமை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வோம் எனவும் மீனவர்கள் உறுதி அளித்தனர். இதனால், 12 நாட்களாக நடைபெற்று வந்த அமலி நகர் மீனவர்களின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com