திருச்செந்தூர்: கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

திருச்செந்தூர் அமலிநகர் தெற்கு தெருவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று அதிகாலை சக மீனவர்கள் 3 பேருடன் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு.
Published on: 

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் தெற்கு தெருவைச் சேர்ந்த பிச்சையா தல்மேதா மகன் குணசேகரன் (வயது 62), மீனவர் ஆவார். இவர் இன்று அதிகாலை சக மீனவர்கள் 3 பேருடன் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு

கரையிலிருந்து 5 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, குணசேகரன் எதிர்பாராத விதமாகக் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சக மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், திருச்செந்தூர் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X