கழிவுநீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி தூய்மைப்பணியாளர் பலி

எதிர்பாராத விதமாக பாதாள கழிவுநீர் கால்வாய்க்குள் மணி தவறி விழுந்தார்
கழிவுநீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி தூய்மைப்பணியாளர் பலி
Published on

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப்பணியாளராக மணி என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், மணி இன்று காலை சக பணியாளர்களுடன் சேர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பாதாள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாதாள கழிவுநீர் கால்வாய்க்குள் மணி தவறி விழுந்தார். அப்போது, அவரை விஷவாயு தாக்கியது. இதில், தூய்மைப்பணியாளர் மணி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

உயிரிழந்த மணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com