திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் - அமைச்சர் சேகர் பாபு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

உலக பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் தேர்திருவிழாவை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் - அமைச்சர் சேகர் பாபு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
Published on

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு அர்த்தநாரீஸ்வர் திருக்கோவில் வைகாசி விசாகத் தேர்திருவிழா கடந்த 4-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.

14 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் 10-வது நாள் நிகழ்ச்சியான அர்த்தநாரீஸ்வர் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தேரை வடம் பிடித்து தேர் இழுக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், எம்எல்ஏ ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பிசிங், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உள்ளிட்ட அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பல தரப்பினரும் அன்னதானம் வழங்கினார்கள். திருவிழாவை ஒட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com