திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 49 மி.மீட்டர் மழைப்பதிவு

திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 49 மி.மீட்டர் மழைப்பதிவு
Published on

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 49 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

திருச்செங்கோடு-49, சேந்தமங்கலம்-22, நாமக்கல்-20, கொல்லிமலை செம்மேடு-20, மங்களபுரம்-19, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-17, ராசிபுரம்-14, குமாரபாளையம்-10, எருமப்பட்டி-8, புதுச்சத்திரம்-5, பரமத்திவேலூர்-4.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com