திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று ஆதரவு

திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று ஆதரவு
Published on

பெரம்பலூர்:

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 பேரை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த தனியார் நிறுவனத்தை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 3-வது நாளாக அந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாததாலும், பாஸ்ட் டேக் செயல்படாததாலும் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக சென்று வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் இன்று மாலை தொழிலாளர்கள் நல ஆணையரிடம் பேசி இதற்கு தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com