திருநெல்வேலி: கஞ்சா விற்பனை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


திருநெல்வேலி: கஞ்சா விற்பனை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

திருச்சி, திருநெல்வேலியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாயனூர், மருளாளிக்காடை சேர்ந்த முருகேஷ் மகன் காமராஜ் (வயது 28), சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் திருநெல்வேலி மாவட்டம், வடக்கு வள்ளியூரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிஸ்குமார்(27) சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேல்கனி, சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 ேபரும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story