திருநெல்வேலி: கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் 2 வாலிபர்கள் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல், திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீசார் கவனத்திற்கு வந்தது.
திருநெல்வேலி: கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட ராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பொன்னுமணி (வயது 28), சங்கர்நகர், ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்த ஆறுமுகம் மகன் உதயபிரகாஷ்(23) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் 2 பேரும் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர், மேற்சொன்ன 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மேற்சென்ன 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (12.8.2025) அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com