திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் களக்காடு, வீரவநல்லூர் பகுதிகளில் 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், சிங்கிகுளம், தெற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வானுமாமலை(எ) குறளி (வயது 38) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், வானுமாமலை(எ) குறளி மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், வானுமாமலை(எ) குறளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், கிளாக்குளம், மாதாங்கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் இசக்கிமுத்து(எ) கட்டஇசக்கி(42) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் அடிதடி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கவனத்திற்கு வந்தது.

இததனையடுத்து அவர், இசக்கிமுத்து(எ) கட்டஇசக்கி மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், இசக்கிமுத்து(எ) கட்டஇசக்கி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com