திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

முன்னீர்பள்ளம், உவரி பகுதிகளில் 2 பேர் கொலை முயற்சி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கவனத்திற்கு வந்தது.
திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேலச்செவல், செல்விபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாபு மகன் மாரியப்பன் (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் மேற்சொன்ன நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல் நெல்லை மாவட்டம், உவரி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட உவரி, பீச் காலனியை சேர்ந்த சசிகுமார் மகன் கெளதம் (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கொலை முயற்சி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகளை கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் மேற்சொன்ன நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேற்சொன்ன முன்னீர்பள்ளம், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர்களின் வேண்டுகோளின்படி, மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் மாரியப்பன், கௌதம் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று (14.5.2025) அடைக்கப்பட்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com