திருநெல்வேலி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, மானூர் பகுதிகளில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்த 2 பேர் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கொலை மிரட்டல், வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், மேல தாழையூத்தை சேர்ந்த கருத்தபாண்டி மகன் அருணாச்சலம்(எ) அருண் (வயது 27) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல், அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், அருணாச்சலம் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், அருணாச்சலம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், மானூர், எட்டாங்குளத்தை சேர்ந்த காளிதாஸ் மகன் கார்த்தி (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை மிரட்டல், வழிப்பறி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், கார்த்தி மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் கார்த்தி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com