திருநெல்வேலி: கஞ்சா வழக்கில் ஒரே நாளில் 4 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து, திருக்குறுங்குடி, மானூர், வீரவநல்லூர் ஆகிய 4 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஒரு பெண் உள்பட 4 பேர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.
திருநெல்வேலி: கஞ்சா வழக்கில் ஒரே நாளில் 4 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து, திருக்குறுங்குடி, மானூர் மற்றும் வீரவநல்லூர் ஆகிய 4 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் பேராச்சிசெல்வி (வயது 38), சண்முகசுந்தரம்(33), மாரிமுத்து(30), கிங்ஸ்லின் கோயில்ராஜ்(32) ஆகிய 4 பேரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.

மேற்சொன்ன 4 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, சம்மந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பேராச்சிசெல்வி மதுரை பெண்கள் தனிச்சிறையிலும், மற்ற 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் நேற்று அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com