திருநெல்வேலி: குற்றச் செயலில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மானூர் பகுதியில் 4 பேர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீசார் கவனத்திற்கு வந்தது.
திருநெல்வேலி: குற்றச் செயலில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ் (வயது 24), யோசுவா மகன் நந்தகுமார்(21), முத்துராஜ் மகன் கதிரவன்(23), லெட்சுமணன் மகன் சுடலைமணி(23) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர் மேற்சொன்ன 4 பேர் மீதும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 4 பேரும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com