திருநெல்வேலி: பாலியல் வழக்கு குற்றவாளிகள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் ஆவர்.
திருநெல்வேலி: பாலியல் வழக்கு குற்றவாளிகள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம், தெற்கு தெருவை சேர்ந்த முகமது செய்யதுஅலி மகன் முகமதுகெளசர் (வயது 23), பக்கிர்மைதீன் மகன் சதாம்உசேன்(25), நாகூர்மீரான் மகன்களான அசார்மைதீன்(20), முகமதுசேக் அபுதாஹிர்(22) ஆகியோர் பாலியல் குற்ற வழக்கில் குற்றவாளிகள் ஆவர். இவர்கள் மீது திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் நேற்று (29.7.2025) மேற்சொன்ன 4 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com