

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், பல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்த மணி மகன் ரமேஷ் (வயது 22) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளின் பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் ஆனந்த மோகன் உத்தரவின் பேரில், மேற்சொன்ன வாலிபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 62 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.