திருநெல்வேலி: 70 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தாழைகுளம் விலக்கு அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலி: 70 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது.
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே 70 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதில் தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர்.

போலீசார் வாகனத் தணிக்கை

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தாழைகுளம் விலக்கு அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனை செய்வதற்காக குட்கா பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது.

70 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

அதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தாழைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 64) மற்றும் கிருஷ்ணமூர்த்தி(43) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த 2 பேரிடமும் இருந்து 70 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர் நடவடிக்கை

மேலும் இவர்களுக்கு குட்கா புகையிலைப் பொருட்களை விநியோகம் செய்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் போதை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

X