திருநெல்வேலி: தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது


திருநெல்வேலி: தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
x

அம்பாசமுத்திரம் பகுதியில் அண்ணன், தம்பியிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கத்தியால் கையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், பெரியகுளம் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசங்கர் (வயது 33) என்பவரும் சுப்பிரமணியன் (37) என்பவரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். இந்நிலையில் பழனிசங்கர் காதல் திருமணம் செய்ததிலிருந்து, பழனிசங்கருக்கும் சுப்பிரமணியனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (11.5.2025) பழனிசங்கரும் அவரது மனைவியும் தனது வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சுப்பிரமணியன் பழனிசங்கரிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கத்தியால் கையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து பழனிசங்கர் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மேதாஜி சிதம்பரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுப்பிரமணியனை நேற்று (12.5.2025) கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

1 More update

Next Story