திருநெல்வேலி: வழிப்பறி வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 3 வழிப்பறி வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: வழிப்பறி வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
Published on

கடந்த 2018-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகம், கிருஷ்ணாபுரம் அருகே, ஒரு பெண்ணிடம் தங்கச்செயினை முத்துக்குமார் என்பவர் வழிப்பறி செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணையின் முடிவில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மூன்றாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குற்றவாளியான முத்துக்குமாருக்கு (வயது 36) எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதித்துறை நடுவர் ஜெயசங்கரகுமாரி நேற்று குற்றவாளிக்கு, வழிப்பறி குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா, சிவந்திபட்டி காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஏஞ்சல் செல்வராணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 3 வழிப்பறி வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com