திருநெல்வேலி: போக்சோ வழக்கில் நீதிமன்ற பிணை ரத்து; குற்றவாளி கைது

திருநெல்வேலியில் போக்சோ வழக்கில் தொடர்புடைய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
போக்சோ வழக்கில் நீதிமன்ற பிணை ரத்து; குற்றவாளி கைது.
Published on: 

திருநெல்வேலி,

பிணை ரத்து செய்யப்பட்ட போக்சோ வழக்கில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை திருநெல்வேலி மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

போக்சோ வழக்கில் பிணை

திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2025-ம் ஆண்டு போக்சோ வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டை, என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ராசையா மகன் பட்டுராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

வழக்குப்பதிவு

இந்த நிலையில், மேற்சொன்ன நபர், 3.4.2026 அன்று மீண்டும் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டது தொடர்பாக திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போக்சோ வழக்கில் பிணை ரத்து

அதைத் தொடர்ந்து, ஏற்கனவே பிணையில் வெளிவந்திருந்த நிலையில் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டதையடுத்து, 2025-ம் ஆண்டு திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை நீதிமன்றம் 18.5.2026 அன்று ரத்து செய்தது.

குற்றவாளி கைது

அதைத் தொடர்ந்து, மேற்சொன்ன வழக்கில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த மேற்சொன்ன குற்றவாளியை திருநெல்வேலி மாவட்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் இன்று (29.9.2026) கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com