திருநெல்வேலி: மின்வாரிய ஊழியர்கள் மின் பாதுகாப்பு உறுதிமொழி

சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து உதவி செயற்பொறியாளர் சந்திரன் தலைமையில் மின் பாதுகாப்பு வகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி: மின்வாரிய ஊழியர்கள் மின் பாதுகாப்பு உறுதிமொழி
Published on

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், சேரன்மகாதேவி உபகோட்டத்தில் உள்ள பிரிவு அலுவலகங்களில் உள்ள அனைத்து களப் பணியாளர்களுக்கும் திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி உத்தரவுப்படி, கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வழிகாட்டுதலின்படி நேற்று சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து உதவி செயற்பொறியாளர் சந்திரன் தலைமையில் மின் பாதுகாப்பு வகுப்பு நடைபெற்றது.

மின் பாதுகாப்பு வகுப்பில் மற்ற இடங்களில் நடைபெற்ற விபத்துக்கள் குறித்தும் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், மின்வாரிய இணையதளத்தில் பாதுகாப்பு புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது குறித்தும் சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் விரிவாக எடுத்து கூறினார். பின்னர் அவர் முன்னிலையில் அனைத்து பணியாளர்களும் மின் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உதவி மின் பொறியாளர் கைலாசமூர்த்தி, முக்கூடல் உதவி மின் பொறியாளர் பிரம்மநாயகம், கோபாலசமுத்திரம் உதவி மின் பொறியாளர் ரவிச்சந்திரன்(எ) மாடசாமி மற்றும் உப கோட்டத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com