

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் சொத்து தகராறில் தாத்தாவை வெட்டி கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த தளவாய்தேவர் என்பவரை, சொத்து தகராறு காரணமாக நேற்று காலை 6.30 மணியளவில், அவரது பேரன் கிருஷ்ணராஜா என்பவர் அரிவாளால் வெட்டியதில், தளவாய்தேவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும், நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி., நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் தடயவியல் நிபுணர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கிருஷ்ணராஜாவை போலீசார் 3 மணி நேரத்தில் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.