திருநெல்வேலி: பண பிரச்சினையில் ஒருவரை தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சங்கர்நகரை சேர்ந்த ஒருவருக்கும் இடையே பண பிரச்சினை இருந்து வந்தது.
கைது
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தென்கலம், வடக்கு தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 58) என்பவருக்கும் சங்கர்நகரை சேர்ந்த மாரியப்பன்(38) என்பவருக்கும் இடையே பணப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று, தாழையூத்து சங்கர்நகர் அருகே மாரியப்பன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஜாகீர் உசேன் பணத்தை தரும்படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன், ஜாகீர் உசேனை அசிங்கமாக பேசி, தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து ஜாகீர் உசேன் தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாரியப்பனை இன்று கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com