திருநெல்வேலி: 17 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

நாங்குநேரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலி: 17 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நாங்குநேரி காமராஜர் சாலை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஆலங்குளத்தை சேர்ந்த ராம்தாஸ் (வயது 41) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 17.55 கிலோகிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராம்தாஸை நேற்று கைது செய்தார்.

மேலும் அவரிடமிருந்து 17.55 கிலோகிராம் புகையிலை பொருட்களை கைப்பற்றி போலீசார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com