திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது


திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
x

பழவூர் பகுதியில் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடைய பால்சுபி, நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 5½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம், பழவூர் பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் ஈடுபட்ட யாக்கோபுரம், வடக்கு நெடுவிளை தெருவை சேர்ந்த பால்சுபி (வயது 35) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 5½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பால்சுபியை பழவூர் காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று (16.5.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

1 More update

Next Story