திருநெல்வேலி: பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை மிரட்டியவர் கைது

திருநெல்வேலியில் அடைமிதிப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் தனது உறவினர் ஒருவருக்கு கடனாக ரூ.4 ஆயிரம் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி: பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை மிரட்டியவர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம், அடைமிதிப்பான்குளம், வேத கோவில் தெருவை சேர்ந்த புஷ்பம் (வயது 50), தனது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார்(எ) ராஜ்(46) என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பாக கடனாக ரூ.4,000 கொடுத்துள்ளார். அதனை புஷ்பம் பலமுறை கேட்டும் திருப்பி கொடுக்காமல் ராஜ்குமார் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 16.6.2025 அன்று புஷ்பம் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து புஷ்பம் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் அருள்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராஜ்குமார்(எ) ராஜை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com