திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், ஆனைக்குடி, பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த முத்து, ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
Published on

கடந்த 2022-ம் ஆண்டு ஆனைக்குடி, பெருமாள்புரம், நடுத்தெருவை சேர்ந்த முத்து (வயது 39), ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வள்ளியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு முத்து மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து போக்சோ வழக்கு குற்றவாளியான முத்துவுக்கு போக்சோ, கடத்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையினை ஏக காலத்தில் அனுபவிக்கவும் மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் 2 1/2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் வள்ளியூர் காவல் துறையினரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் உஷா, புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com