

நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்திரைகனி (வயது 40). இவர் நேற்று தனது குடும்ப தேவைக்காக அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை ரூ.1.90 லட்சத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றார்.
பின்னர் அந்த பணத்தை துணிப்பையில் வைத்துக்கொண்டு திசையன்வி ளைக்கு புறப்பட்டார். உடன்குடியில் இருந்து திசையன்விளைக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி சென்றார். அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சித்திரைகனி நின்றவாறு பயணித்தார்.
திசையன்விளைக்கு சென்றதும் பஸ்சில் இருந்து சித்திரைகனி கீழே இறங் கினார். அப்போது அவர் தனது துணிப்பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.1.90 லட்சம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர் நைசாக பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியது.