திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.15 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலியில் ஒரு கடையை மானூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மகாராஜன் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.15 ஆயிரம் அபராதம்
Published on

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், இத்திகுளத்தை சேர்ந்த நயினார் மகன் குசலவன் (வயது 55) என்பவர் வீட்டிற்கு அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையை மானூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மகாராஜன் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைக்காரருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும், உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்து, அந்த கடை 14 நாட்களுக்கு சீல் வைத்து அடைக்கபட்டுள்ளது. மானூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மகாராஜன் மற்றும் கங்கைகொண்டான் போலீசார் முன்னிலையில் மேற்சொன்ன கடையை சீல் வைத்து அடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com