திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.25 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுடேனி சோதனை செய்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியை சேர்ந்த உசேன் மகன் ஹாஜாமுகைதீன் (வயது 54) என்பவர் வீட்டிற்கு அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுடேனி சோதனை செய்தார். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்ததற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்து கடையை 15 நாட்களுக்கு சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
களக்காடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுடேனி மற்றும் ஏர்வாடி காவல்துறையினர் முன்னிலையில் ஹாஜாமுகைதீனின் கடையை சீல் வைத்து அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story






