திருநெல்வேலி: எஸ்.பி. அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்று கூறி உறுதிமொழி எடுத்தனர்.
திருநெல்வேலி: எஸ்.பி. அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
Published on

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அப்போது, "நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன்.

எனவே நான் அனைத்துச் செயல்களிலும் நேர்மையும், சட்டவிதிகளையும் பின்பற்றுவேன். லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன். அனைத்துச் செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவேன். பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன்.

தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதிலும் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன். ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன்" என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com