திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள கோவிலை உடைத்து உள்ளே சென்ற ஒருவர் அங்கே திருட்டில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
Published on

கடந்த 2015-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள கோவிலில் திருடிய வழக்கில், இன்று (12.7.2025) திருநெல்வேலி மூன்றாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினை குற்றவியல் நடுவர் நீதிபதி ஜெயசங்கரகுமாரி வழங்கினார்.

நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கில் சம்பந்தப்பட்ட 1வது குற்றவாளியான நொச்சிகுளத்தைச் சர்ந்த ஆறுமுகம் (வயது 48) மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, திருடுவதற்காக கோவிலை உடைத்து உன் நுழைந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும், கோவிலில் திருடிய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேற்சொன்ன சிறை தண்டனையினை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இவ்வழக்கின் மற்றொரு எதிரியான கணபதி(எ) கணேசன்(50) என்பவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரனை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பராஜா மற்றும் தாலுகா காவல் நிலைய காவல் அதிகாரிகள், காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நிறம்பட வாதிட்ட அரசு வழக்குரைஞர் புனிதா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். மேலும் அவர் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சியங்களை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com