திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் சர்ச்சை பதிவு- வாலிபர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் சர்ச்சை பதிவு- வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், வடக்கு கும்பிளம்பாடு, நடுத் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் தங்கபாண்டி (வயது 35) என்பவர் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

இதுகுறித்து ராதாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையைத் தூண்டும் விதமாக வசனங்கள் வைத்த தங்கபாண்டியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com