திருநெல்வேலி: சாட்சி சொல்பவரை கல்லால் தாக்கி மிரட்டிய வாலிபர் கைது

வி.கே.புரம், சேர்வலாறை சேர்ந்த வாலிபர் மீது வி.கே.புரம் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம், சேர்வலாறை சேர்ந்த மாடசாமி (வயது 31) என்பவர் மீது வி.கே.புரம் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கின் சாட்சியாக இருந்து வரும் மாடசாமியின் வீட்டின் அருகே வசிக்கும் அசோக்குமார்(47) என்பவரிடம் சாட்சி சொல்லக்கூடாது என்று மாடசாமி அவரை பார்க்கும் போதெல்லாம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (1.6.2025) அசோக்குமார் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மாடசாமி, அசோக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி, கல்லால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து அசோக்குமார் வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாடசாமியை நேற்று (2.6.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.






