திருநெல்வேலி: கொலை முயற்சி, அடிதடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவனத்திற்கு வந்தது.
திருநெல்வேலி: கொலை முயற்சி, அடிதடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு காருகுறிச்சி, கீழ கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் உக்கிரபாண்டி(எ) உக்கிரா (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் பொது சொத்தை சேதப்படுத்தியது போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுஜித் ஆனந்த் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர், உக்கிரபாண்டி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், உக்கிரபாண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (24.6.2025) அடைக்கப்பட்டார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com