திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x

திருநெல்வேலியில் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், மாறாந்தை, வடக்கு தெருவை சேர்ந்த செல்லபாண்டி மகன் மகாராஜன் (வயது 25) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர், மகாராஜன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மகராஜன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று (6.6.2025) அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story