திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

குறிச்சியை சேர்ந்த வாலிபர் கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு போலீசார் கவனத்துக்கு வந்தது.
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, குறிச்சியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் முத்து(எ) முத்துக்குமார் (வயது 21) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர் மேற்சொன்ன வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், முத்து(எ) முத்துக்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com