திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சீதபற்பநல்லூர் போலீஸ் கவனத்திற்கு வந்தது.
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், சிறுக்கன்குறிச்சி மேட்டு தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் பேச்சிமுத்து (வயது 35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், பேச்சிமுத்து மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், பேச்சிமுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com