திருநெல்வேலி: கொள்ளை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

சிவந்திபட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி: கொள்ளை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், பத்மநாபமங்களத்தை சேர்ந்த சரவணன் மகன் கருப்பசாமி (வயது 21) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அடிதடி, திருட்டு மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் மேற்சொன்ன வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், கருப்பசாமி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று (1.7.2025) அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com