திருநெல்வேலி: கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாளன்குளத்தை சேர்ந்த முருகன் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி: கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாளன்குளத்தை சேர்ந்த ராமையா மகன் முருகன் (வயது 27) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், முருகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று (28.5.2025) பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com