திருநெல்வேலி: கொள்ளை, மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தாழையூத்து பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, கொள்ளை, மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கவனத்திற்கு வந்தது.
திருநெல்வேலி: கொள்ளை, மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கொள்ளை மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட தாழையூத்து, காமிலா நகரைச் சேர்ந்த கருத்தபாண்டி மகன் வெயில்குமார்(எ) கொக்கிகுமார் (வயது 29) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை, மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் வெயில்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், வெயில்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com