

காரைக்குடி,
சிவகங்கை மறை மாவட்ட 34-வது திருப்பயண கூட்டு திருப்பலி காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள ஆனந்தா அருங்கொடை மையத்தில் நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட அப்போஸ் தலிக்க பரிபாலகர் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் இணைந்து பங்கேற்போம் இறைமையின் சாட்சிகளாவோம் என்ற மைய சிந்தனையில் கூட்டு திருப்பலி நடந்தது. கூட்டொருங்கியக்க திருஅவையாக ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்தி அறிவிப்பு என்ற வாழ்வாக்கிட வகையில் நிகழ்ச்சியில் இடம் பெற்றது. தொடர்ந்து மறைமாவட்ட பாதுகாவலர் புனித அருளானந்தர் மற்றும் இறை ஊழியர் லூயி லெவே ஆகியோரின் கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.
சிவகங்கை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணி சூசைமாணிக்கம், மறை மாவட்ட பொருளர் சந்தியாகு, வியான்னி இல்ல இயக்குனர் அமலன் மற்றும் செயலர்கள், மறை மாவட்ட ஆலோசகர் குழாம், ஆனந்தா அருங்கொடை தியான இல்ல இயக்குனர் இருதயராஜ், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் நிகழ்ச்சியை வழி நடத்தினர். நிகழ்ச்சியில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மறை மாவட்ட பங்கு இறைமக்கள், அருட்பபணியாளர்கள், இருபால் துறவியர்கள், உள்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.