

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், மாவட்ட கலெக்டர் அமர் புஷ்வாகா தனது மனைவியுடன் சென்று 2-வது தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மூக்கனூர் கிராமத்திற்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்று வந்த நெற்பயிர் நடும் பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது கலெக்டர் அமர் புஷ்வாகா தனது மனைவியுடன் சேர்ந்து வயலில் இறங்கி நாற்று நட்டார். கலெக்டரின் இந்த செயலை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.